புதுடெல்லி: மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவில் வெள்ளிக்கிழமை இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவாகியுள்ளது.

மத்திய அமெரிக்காவில் உள்ள நாடான கவுதமாலாவில் வெள்ளிக்கிழமை இரவு 11:52 மணிக்கு, டாக்சிஸ்கோ நகரத்திலிருந்து ஏழு கிலோமீட்டர் (நான்கு மைல்) தொலைவில் 108 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவாகியுள்ளது. யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய நகரமான ஆன்டிகுவா கவுதமாலாவிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/iKa9uyM
via IFTTT

Post a Comment

Previous Post Next Post