வாஷிங்டன்: சிரிய எல்லைக்கு அருகில் ஜோர்டான் நாட்டின் வடகிழக்கு பகுதியில் நடந்த ட்ரோன் தாக்குதலில் 3 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் மேலும், இதில் 25 வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆனால், மூன்று அமெரிக்க வீரர்கள் உயிரிழந்த ட்ரோன் தாக்குதல் தங்கள் நாட்டின் எல்லையில் நடக்கவில்லை என்று ஜோர்டான் கூறியுள்ளது. இது குறித்து ஜோர்டான் அரசு செய்தித் தொடர்பாளர் முஹன்னத் முபைதீன் செய்தியாளர்களிடம், “அமெரிக்கப் படைகளைக் குறிவைத்த தாக்குதல் ஜோர்டானில் நடக்கவில்லை. இது சிரியாவில் உள்ள அல்-டான்ஃப் என்ற தளத்தில் நடந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதலை ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாத குழுக்கள் நடத்தியதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குற்றம்சாட்டியுள்ளார். அதோடு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/lIvbzX5
via IFTTT
Post a Comment