மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக நடந்த போரட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் போராட்டக்காரர்கள் 9 பேர் பலியாகினர்.
இதுகுறித்து மியான்மர் ஊடகங்கள் தரப்பில், “ மியான்மரில் யாங்கூன், மண்டாலா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வருகின்றன. இந்த நிலையில் இன்று (புதன்கிழமை) போராட்டக்காரர்கள் மீது ராணுவ வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 9 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3rpma0l
via IFTTT
Post a Comment