உலகளாவிய ஊழல் போக்குக் குறியீட்டின் (Global Corruption Perception Index) 2023 ஆம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலை, ‘டிரான்ஸ்பெரன்சி இன்டர்நேஷனல்’ அமைப்பு வெளியிட்டுள்ளது. இவ்வமைப்பு கடந்த 30 ஆண்டுகளாக, 'சட்டத்தின்படி ஆட்சி செய்து ஊழலை எதிர்த்துப் போராடும்' நாடுகள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு ஊழல் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது. ஊழலற்ற நிர்வாகம் மற்றும் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளின் அடிப்படையில் உலக நாடுகளுக்கு புள்ளிகள் வழங்கப்படும். 100 மதிப்பெண்களுக்கு நாடுகள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் அவற்றின் வரிசை அமைகிறது.
2023 ஆம் ஆண்டுக்கான பட்டியலில் மொத்தம் 180 நாடுகள் இடம்பெற்றுள்ளன.மொத்தம் 180 நாடுகளில் எடுக்கப்பட்ட ஆய்வில், இந்தியா பெற்றுள்ள மதிப்பு 100-க்கு 39, பிடித்துள்ள இடம் 93. கடந்த 2022 ஆம் ஆண்டில் இந்தியா இந்தப் பட்டியலில் 85-வது இடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. நமது அண்டை நாடான பாகிஸ்தான், 29 மதிப்பெண்களுடன் 133-வது இடத்தில் இருக்கிறது. 43 மதிப்பெண்கள் பெற்று சீனா 76-வது இடத்தைப் பிடித்திருக்கிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/X0PWGKp
via IFTTT
Post a Comment