பியாங்யாங்: தென் கொரியாவுக்கு சொந்தமான யோன்பியோங் தீவு பகுதியில் தொடர்ந்து மூன்றாவது நாளாக வட கொரியா துப்பாக்கி சூடு பயிற்சியில் ஈடுபட்டு வருவதால், தீவுவாசிகள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என்று தென் கொரியா எச்சரித்துள்ளது.
தென் கொரியாவின் மேற்கு கடற்கரை பகுதியில் வட கொரியா துப்பாக்கிச்சூடு பயிற்சி நடந்தி வருவதாக யோன்ஹப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனிடையே, வட கொரியாவின் துப்பாக்கிச் சூடு சத்தம் இந்தபகுதிகளில் கேட்பதால் வீட்டைவிட்டு வெளியே வரும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும் படி தென் கொரிய அரசு அனைத்து மக்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக தென் கொரியாவுக்கு சொந்தமான யோன்பியோங் தீவு பகுதியில் வட கொரியா வெள்ளிக்கிழமை திடீர் பீரங்கி குண்டு தாக்குதல் நடத்தியது. இந்த தீவு தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையே நீண்ட ஆண்டுகளாக பிரச்சினை நீடித்து வரும் நிலையில், வட கொரியாவின் ராணுவ நடவடிக்கையால் கொரிய தீபகற்பம் பகுதியில் போர் பதற்றம் உருவாகியுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/NW4bdkG
via IFTTT
إرسال تعليق