நியூயார்க்: அலாஸ்கா ஏர்லைன்ஸின் விமானம் ஒன்றின் கதவு நடுவானில் வெடித்துப் பறந்த அபாயகரமான சம்பவத்துக்கு போயிங் நிறுவனம் பொறுப்பேற்றுள்ளது.அது எங்களுடைய தவறு என்று அந்நிறுவனத்தின் சிஇஓ டேவ் கால்ஹவுன் தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில் முழுமையான வெளிப்படைத்தன்மை இருக்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
அலாஸ்கா ஏர்லைன்ஸின் போயிங் 737- 9 மேக்ஸ் ரக விமானம் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை அண்டாரியோவுக்கு செல்லும் வழியில் அதன் கதவு ஒன்று நடுவானில் வெடித்துப் பறந்தது. இதனால் அந்த விமானம் அவசரமாக போர்ட்லேண்டில் தரையிறக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து போயிங் விமான நிறுவனத்தில் நடந்த தொழிலாளர்களின் பாதுகாப்பு கூட்டத்தில் அதன் தலைமை செயல் அதிகாரி டேவ் கால்ஹவுன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், "எங்களின் தவறினை ஒப்புக்கொண்டு இந்தத் தலையாயப் பிரச்சினையை நாங்கள் அணுகப் போகிறோம். இதன் ஒவ்வொரு அடியிலும் வெளிப்படைத் தன்மை இருக்கும்" என்று தெரிவித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/uwnJb2i
via IFTTT
Post a Comment