குவெட்டா: பாகிஸ்தானின் தென்மேற்கில் அமைந்துள்ள பலுசிஸ்தான், அந்நாட்டின் மிகப்பெரிய மாநிலம் ஆகும். இங்கு பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் (பிஎல்ஏ) என்ற அமைப்பு பல ஆண்டுகளாக தனி நாடு கேட்டு போராடி வருகிறது.

இந்நிலையில் பலுசிஸ்தானில் நோஷ்கி, துர்பத், புளேடா ஆகிய 3 இடங்களில் நடந்த தாக்குதல்களுக்கு பிஎல்ஏ பொறுப்பேற்றுள்ளது. இதுகுறித்து பிஎல்ஏ செய்தித் தொடர்பாளர் ஜீயந்த் பலூச் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிஎல்ஏ போராளிகள் ஸ்னைபர்கள் மற்றும் கனரக ஆயுதங்களை பயன்படுத்தி நோஷ்கியின் பால்கானி, கேஷாங்கி பகுதியில் உள்ள பாகிஸ்தான் ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இதில் சிப்பாய் ஒருவர் அதே இடத்தில் உயிரிழந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/QPmTw42
via IFTTT

Post a Comment

Previous Post Next Post