மியான்வாலி: பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதியில் மியான்வாலி என்ற இடத்தில் உள்ள விமானப் படை பயிற்சி மையத்தில் நேற்று காலை 9 தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் 3 விமானங்கள் சேதம் அடைந்தன.

இதையடுத்து விமானப்படை தளத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தேடுல் வேட்டை நடத்தி 9 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றனர். தீவிரவாத தாக்குதலில் சேதம் அடைந்த 3 விமானங்களும், பயன்பாட்டில் இல்லாத பழைய விமானங்கள் எனவும், பயன்பாட்டில் உள்ள விமானப்படை விமானங்கள் எதுவும் சேதம் அடையவில்லை எனவும் பாகிஸ்தான் ராணுவம் கூறியுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/9cfNhXO
via IFTTT

Post a Comment

Previous Post Next Post