டெல் அவிவ்: காசாவில் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்புகள் மீது தாக்குதல் நடத்தவில்லை என்றும், ஹமாஸ் பயங்கரவாதிகள் உள்ள கட்டிடங்களை குறிவைத்தே தாக்குதல் நடத்தப்படுவதாகவும் இஸ்ரேல் ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியதை அடுத்து, இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. இரு தரப்புக்கும் இடையே மோதல் தொடங்கி 4 நாட்கள் முடிந்து 5வது நாளை எட்டி உள்ளது. இந்நிலையில், இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் குறித்து அதன் ராணுவ செய்தித் தொடர்பாளர் ஜோனாதன் கான்ரிகஸ் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது: "ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த இஸ்ரேலியர்களின் எண்ணிக்கை 1,200 ஆக அதிகரித்துள்ளது. தொடக்கத்தில் 700 என்றும், 900 என்றும் இருந்தது. தற்போது இந்த எண்ணிக்கை 1,200 ஆக உயர்ந்துள்ளது. இது இறுதி எண் கிடையாது. ஏனெனில், இறந்தவர்கள் குறித்த விவரங்களை சேகரிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2,700க்கும் அதிகமான இஸ்ரேலியர்கள் காயமடைந்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/N5VuyhZ
via IFTTT
Post a Comment