டெல் அவிவ்: ஹமாஸ் தீவிரவாதிகளின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட இஸ்ரேலின் தெற்கு பகுதி நகரங்களை சேர்ந்த மேயர்களுடன் பிரதமர் நெதன்யாகு நேற்று காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:
ஹமாஸ் தீவிரவாதிகளின் தாக்குதலில் மிகவும் கடினமான காலத்தை கடந்து செல்க றோம். இஸ்ரேல் மக்கள் அனைவரையும் அழிக்க ஹமாஸ் அமைப்பு விரும்புகிறது. வீடுகளுக்குள் புகுந்து குழந்தைகள், முதியோரை ஈவு இரக்கமின்றி தீவிரவாதிகள் கொலை செய்துள்ளனர். விடுமுறை கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த அப்பாவி மக்களை கொடூரமாக கொலை செய்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Vi6uB2Q
via IFTTT
Post a Comment