புதுடெல்லி: பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானப் படை தளத்தில் 2016 ஜனவரியில் ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பின் 4 தீவிரவாதிகள் ஊடுருவி திடீர் தாக்குதல் நடத்தினர். பின்னர் நால்வரும் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படை தரப்பில் 7 பேர் வீரமரணம் அடைந்தனர்.
இந்த தாக்குதலை ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பின் சியால் கோட் கமாண்டரான ஷாகித் லத்தீப்உள்ளிட்ட இருவர் கையாண்டது, வழிநடத்தியது தெரியவந்தது. இந்நிலையில் சியால்கோட் நகரில்உள்ள மசூதி ஒன்றில் ஷாகித் லத்தீப்அடையாளம் தெரியாத நபர்களால் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார். ஷாகித் லத்தீப் கடந்த 1996-ல் ஜம்முவில் போதைப் பொருள் மற்றும் தீவிரவாத வழக்கில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் கடந்த 2010-ம் ஆண்டு நாடு கடத்தப்பட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/dvHJoSG
via IFTTT
Post a Comment