கொழும்பு: இந்திய ரூபாயை இலங்கையும் பொது நாணயமாக பயன்படுத்துவது குறித்து ஆலோசிப்பதாக அந்நாட்டின் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார். அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் பயன்படுத்தப்படுவதைக் காண விரும்புவதாக அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார். இந்திய சிஇஒக்கள் கூட்டமைப்பில் உரையாற்றியபோது ரணில் விக்கிரமசிங்கே இதனைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அவர் பேசுகையில், "இந்தியாவின் அண்டை நாடாக இருப்பதால் இலங்கை வளமான வரலாறு, கலாசார பாரம்பரியம், 2500 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட நீண்ட கால நட்பு ஆகியனவற்றால் பயனடைகிறது. கிழக்கு ஆசிய நாடுகளான ஜப்பான், கொரியா, சீனா கடந்த 75 ஆண்டுகளில் பெரும் வளர்ச்சி கண்டன. இப்போது இந்து மகா சமுத்திரப் பிராந்தியத்தில் இது இந்தியாவின் காலம். அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் பயன்படுத்தப்படுவதைக் காண விரும்புகிறேன்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/wgQ32Wn
via IFTTT

Post a Comment

أحدث أقدم