வில்னியஸ்: நேட்டோ மாநாட்டில் ஜெலன்ஸ்கி தனித்து ஒதுங்கி இருப்பது போன்ற புகைப்படம் வெளியாகி சமூக வலைதளப் பக்கங்களில் வைரலாகி வருகிறது.
ஐரோப்பிய நாடான லிதுவேனியாவில் உள்ள வில்னியஸ் நகரில் நேட்டோ அமைப்பு நாடுகளின் உச்சி மாநாடு நடந்தது. இதில், உக்ரைன் விவகாரம் முக்கியத்துவம் பெற்றிருந்தது. மாநாட்டின் இரண்டாவது நாளில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸிகி கலந்துகொண்டார். நிகழ்வில் ஒரு தருணத்தில் உலகத் தலைவர்கள் எல்லாம் பேசிக் கொண்டிருக்க, ஜெலன்ஸ்கி மட்டும் தனியாக நிற்பது போன்ற புகைப்படம் வெளியானது. இதனைத் தொடர்ந்து நேட்டோ மாநாட்டில் ஜெலன்ஸ்கி புறக்கணிப்பட்டார் என்று சிலர் சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்தனர். ஆனால், சந்தர்ப்பச் சூழலின் காரணமாகவே அந்தத் தருணத்தில் ஜெலன்ஸ்கி தனியாக நின்றுக் கொண்டிருக்கிறார் என்று சிலரும் விளக்கமளித்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/V1uR6j2
via IFTTT
Post a Comment