புதுடெல்லி: கரோனா வைரஸ் சீனாவின் வூஹான் வைராலஜி ஆய்வகத்தில் உருவானதற்கான நேரடி ஆதாரம் எதுவும் கண்டறியப்படவில்லை என்று அமெரிக்க புலனாய்வுத்துறையின் அறிக்கை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்காவின் தேசியப் புலனாய்வு இயக்குநராக அலுவலகம் வெள்ளிக்கிழமை நான்கு பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: மத்திய புலனாய்வு முகமை மற்றும் மற்றொரு நிறுவனத்தால் கோவிட் 19 தொற்று எங்கிருந்து பரவியது என்பதை இன்னும் தீர்மானிக்க முடியவில்லை. ஏனென்றால் இரண்டு (இயற்கை மற்றும் ஆய்வகம்) கருதுகோள்களும் குறிப்பிடத்தக்க அனுமானங்களைக் கொண்டிருக்கிறது அல்லது முரணான அறிக்கைகளினால் சிக்கல்களை எதிர்கொள்கின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/CKwSZnt
via IFTTT
Post a Comment