நியூயார்க்: உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்ட அமெரிக்க பத்திரிகையாளர் இவான் கார்ஸ்கோவிச்சுக்கு இரண்டாவது முறையாக தூதர உதவியை ரஷ்யா மறுத்துள்ளது.
‘வால் ஸ்ட்ரீட்’ பத்திரிகையாளரான இவான் கார்ஸ்கோவிச் ரஷ்யாவின் யூரல் மலைப் பிரதேசமான யெகாடரின்பர்க் பகுதியிலிருந்து கைது செய்யப்பட்டதாக எஃப்எஸ்பி (The Federal Securiy Service) எனப்படும் ரஷ்ய உளவுப் பிரிவு போலீஸார் கடந்த மார்ச் மாதம் தெரிவித்தனர். இவான் கெர்ஸ்கோவிச் சில ரகசியத் தகவல்களை இடைமறித்து சேகரிக்க முயன்ற குற்றத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/b7Z5Fcd
via IFTTT
Post a Comment