பாரீஸ்: கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் சிவப்பு நிற திரவத்தை ஊற்றிக்கொண்டு கோஷம் எழுப்பியபடி உக்ரைன் கொடி நிற உடை அணிந்து வந்த பெண்ணால் பரப்பரப்பு ஏற்பட்டது.
75-வது கேனஸ் திரைப்பட விழா பிரான்ஸில் நடைபெற்றது. இதில் நேற்றிரவு பிரெஞ்சு இயக்குநர் பிலிப்பாட்டின் ‘ஆசிட்’ என்ற படம் திரையிடப்பட்டது. இப்படத்தை காண ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டனர். அப்போது உக்ரைனின் கொடி நிறத்தில் (மஞ்சள் - நீலம்) ஆடை அணிந்து வந்த பெண் ஒருவர் திடீரென சிவ நிற திரவத்தை உடலில் ஊற்றி கோஷமிட்டார். அவர் ஆடை முழுவதும் ரத்தக் கறை படித்ததுபோல் ஆனது. இதனைத் தொடர்ந்து அவரை நிகழ்விடத்தில் இருந்து உடனடியாக பாதுகாவலர்கள் வெளியேற்றினர். இதனால், கேன்ஸ் திரைப்பட விழாவில் சற்று பரபரப்பு தொற்றி கொண்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/suSD14C
via IFTTT
إرسال تعليق