தோகா: “தலிபான்களைச் சந்திப்பதை நான் தவிர்க்க போவதில்லை. ஆனால், அதற்கு சரியான நேரம் தற்போது இல்லை” என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியா குத்தரெஸ் தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகள், குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகள் பற்றிய முக்கிய பிரச்சினைகளை விவாதிப்பதற்காக தோகாவில் ஆப்கானிஸ்தான் தூதர்கள் நடத்திய கூட்டத்தில் ஐ.நா.பொதுச்செயலாளர் அண்டோனியா குத்தரெஸ் கலந்து கொண்டார். தலிபான்களுடன் எவ்வாறு பணியாற்றுவது என சர்வதேச சமூகத்திற்கு ஒரு பொதுவான புரிதலை ஏற்படுத்துவதற்காக இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/PkYsG32
via IFTTT
Post a Comment