வாஷிங்டன்: ட்விட்டருக்கு புதிய சிஇஓ நியமிக்கப்பட்டிருப்பதாக எலன் மஸ்க் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் ஒரு பெண் என்ற விவரத்தை தவிர்த்து எந்த தகவலையும் மஸ்க் தெரிவிக்காத நிலையில் புதிய சிஇஓ -வாக அமெரிக்காவைச் சேர்ந்த லிண்டா யாக்கரினோ நியமிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தை வாங்கி இருந்தார் மஸ்க். பயனர்கள் தங்களது கருத்துகளை சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் இந்த தளத்தில் பல்வேறு அதிரடி மாற்றங்களை அவர் செய்தார். பயனர்களுக்கு சந்தா கட்டணம் தொடங்கி ஊழியர்களை பணியில் இருந்து நீக்கியது என அவரது நடவடிக்கைகள் நீண்டன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/WUHkz7R
via IFTTT

Post a Comment

Previous Post Next Post