புதுடெல்லி: உக்ரைனின் பாதுகாப்புத்துறை அமைச்சம் வெளியிட்ட காளிதேவி குறித்த சர்ச்சைக்குரிய ட்விட்டர் பதிவிற்காக, அந்நாட்டு துணை வெளியுறவுத்துறை அமைச்சர் எமின் தபரோவா இன்று (மே 2) மன்னிப்பு கோரியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் இந்து கடவுள் காளியை தவறான முறையில் சித்தரித்து ட்வீட் வெளியிட்டிருக்கிறது. நாங்கள் வருந்துகிறோம். உக்ரைன் மற்றும் அதன் மக்கள் இந்தியாவின் தனித்துவமான கலாச்சாரத்தை மதிக்கிறது. சர்ச்சைக்குரிய அந்த ட்வீட் ஏற்கெனவே நீக்கப்பட்டுவிட்டது. இருதரப்பு உறவு மற்றும் நட்புறவை மேலும் அதிகப்படுத்துவதற்கு உக்ரைன் தீர்மானித்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3YXPM9Z
via IFTTT
Post a Comment