ஜெட்டா: சூடானில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. இதையடுத்து, ராணுவத்துக்கும் துணை ராணுவத்துக்கும் இடையே மோதல் தொடங்கியது. இதில் பலர் கொல்லப்பட்டதால் அந்நாட்டில் வசிக்கும் வெளிநாட்டினர் தாயகம் திரும்புகின்றனர். அங்கு தொடர்ந்து 3-வது வாரமாக சண்டை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ‘ஆபரேஷன் காவேரி’ திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. அதன்படி இந்திய விமானப் படையின் சி-130 ரக விமானம், ஐஎன்எஸ் சுமேதா கப்பல் ஆகியவற்றின் மூலம் இந்தியர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/NnKYBPA
via IFTTT
Post a Comment