வாடிகன்: ”தி போப் ஆன்ஸர்ஸ்“ (The Pope Answers) என்ற ஆவணப்படத்திற்காக கத்தோலிக்க மதகுருவான போப் பிரான்ஸிஸ் அளித்தப் பேட்டியில் “கடவுள் அருளியதில் கலவி அழகானது” என்று கூறியதோடு கலவியின் மாண்புகளையும் எடுத்துரைத்துள்ளார்.
அந்த ஆவணப்படத்திற்காகப் பேசியுள்ள போப் பிரான்சிஸ், "இறைவன் மனிதர்களுக்கு அளித்த அழகானவற்றியும் கலவியும் ஒன்று. உங்களை நீங்கள் கலவி வாயிலாக உணர்த்துவதென்பதும் ஒருவகை வளமைதான். ஆனால், அத்தகைய உண்மையான உணர்வுகளில் இருந்து உங்களை திசைமாற்றும் எந்த ஒரு முறையும் உங்களை கீழ்மைப்படுத்தக் கூடியதே" என்றார். போப் அவ்வாறாகக் கூறியது சுய இன்பத்தில் ஈடுபடுதலை சுட்டிக்காட்டியே என்று வாடிகன் செய்தித்தாளில் விளக்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/VUKBgfo
via IFTTT
Post a Comment