பியாங்யாங்: வடகொரியா மனிதாபிமானமற்ற முறையில் குழந்தைகளையும், கர்ப்பிணி பெண்களை தூக்கிலிடுகிறது என்று தென்கொரியா குற்றம்சாட்டியுள்ளது.
இது குறித்து தென்கொரிய ஒருங்கிணைப்பு அமைச்சகம் தரப்பில், “ஆறு மாத கர்ப்பிணி பெண்ணை வட கொரியா தூக்கிலிட்டுள்ளது. உடல் வளர்ச்சி குறைந்த பெண்களை இனம் கண்டு அவர்களின் கர்ப்பப் பையை நீக்கவும் வடகொரியா உத்தரவிட்டிருக்கிறது. மேலும், தன்பாலின ஈர்ப்பாளர்களையும், பிற மதங்களை வழிப்பட்டவர்களையும் வடகொரியா தூக்கிலிட்டுள்ளது” என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும், வடகொரியாவின் தூக்குத் தண்டனை பட்டியலில் குழந்தைகள் இருப்பதாகவும் தென்கொரியா தெரிவித்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/4L8mT7l
via IFTTT
إرسال تعليق