நைரோபி: கென்யாவில் உணவு உண்ணாமல் இருந்தால் சொர்க்கத்துக்கு செல்லலாம் என்று கூறிய பாதிரியாரின் ஆலோசனையால் 47 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கென்யாவில் கடலோர நகரமான மலிந்திக்கு அருகில் உள்ள ஷகாஹோலா காட்டுப் பகுதியில் குவியல் குவியலாக பிணங்களை போலீஸார் கண்டெடுத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. விசாரணையில் உணவினை தவிர்த்து விரதமிருந்தால் சொர்க்கத்துக்கு செல்முடியும் என்ற கருத்தை அப்பகுதி மக்களுக்கு பாதிரியார் பால் மெக்கன்சி என்பவர் ஆலோசனை வழங்கி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து பாதிரியாரின் ஆலோசனையை கேட்டு மக்கள் உணவருந்தாமல் இருந்து வந்துள்ளனர். இதில் நான்கு பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உயிரிழந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://www.hindutamil.in/news/world/980926-kenyan-police-find-47-bodies-of-suspected-cult-followers.html?frm=rss_more_article
via IFTTT
إرسال تعليق