வாஷிங்டன்: அமெரிக்கா, கனடா நாடுகள் 8,891 கி.மீ. எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளன. கடந்த ஆண்டில் மட்டும் கனடாவில் இருந்து அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற சுமார் ஒரு லட்சம் பேர் பிடிபட்டுள்ளனர். இந்த சூழலில் கடந்த 27-ம் தேதி கனடாவின் கியூபெக் பகுதியில் இருந்து அமெரிக்காவின் மோஹாவ்க் பகுதிக்கு 2 குடும்பங்களை சேர்ந்த 8 பேர் சட்டவிரோதமாக நுழைய முயற்சி செய்தனர்.

அவர்கள் செயின்ட் லாரன்ஸ் ஆற்றில் படகில் அமெரிக்க கரையை நோக்கி சென்றனர். அப்போது கனமழை காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் படகு கவிழ்ந்து 8 பேரும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர். கடந்த சில நாட்களில் 8 பேரின் உடல்களையும் அமெரிக்காவின் மோஹாவ்க் பகுதி போலீஸார் அடுத்தடுத்து மீட்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/fCv6mh8
via IFTTT

Post a Comment

Previous Post Next Post