நமது பால்வளி ஆண்டத்தில் உள்ள பிரமாண்ட நட்சத்திரமான சூரியனில் சமீப ஆண்டுகளாகவே பல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டு வருகிறது. அந்த வகையில் சூரியனில் மேற்பரப்பில் ராட்சத 'துளை' ஒன்று தோன்றியுள்ளது. இந்தத் துளையை கரோனல் துளைகள் என்று விஞ்ஞானிகள் அழைக்கின்றனர். இந்த துளை பூமியை விட 30 மடங்கு அளவு பெரியது என்றும் கூறப்படுகிறது.
இது குறித்து நாசா விஞ்ஞானிகள் கூறும்போது, “இந்த துளை காரணமாக வெள்ளிக்கிழமைக்குள் பூமியை நோக்கி 1.8 மில்லியன் அளவு சூரியக் காற்று வந்தடையும். இதனை தெற்காசிய நாடுகள், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகள் உணரலாம். இந்த வெடிப்புகளிலிருந்து வெளியேறும் வெப்ப கதிர்கள் ரேடியோ தகவல் தொடர்புகள், விண்கலம், விண்வெளி வீரர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். மேலும், இந்தத் துளையின் மூலம் பூமியின் மேற்பரப்பில் இன்னும் கூடுதல் இடங்களில் துருவ ஒளிகள் தோன்றலாம்” என்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/8BTgJKR
via IFTTT
Post a Comment