தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ள கரோனா தடுப்பூசிகள் மருத்துவமனைகளில் சேருபவர்களின் எண்ணிக்கையையும், இறப்பையும் தடுக்கின்றன என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் மூத்த விஞ்ஞானியான சவுமியா சுவாமிநாதன் கூறும்போது, “உலகம் முழுவதும் 10%க்கும் குறைவான மக்கள் கரோனா வைரஸுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியைக் கொண்டுள்ளனர். 50%க்கும் அதிகமானவர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டபின் எதிர்ப்பு சக்தியைப் பெறுகின்றனர். தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகள் மருத்துவமனைகளில் சேருபவர்களின் எண்ணிக்கையையும், இறப்பையும் தடுக்கின்றன” என்று தெரிவித்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2ZWLcHY
via IFTTT
Post a Comment