நாடாளுமன்றக் கட்டிடத்துக்குள் தனது ஆதரவாளர்கள் அத்துமீறலில் ஈடுபட அனுமதித்த, அதிபர் ட்ரம்ப் உடனடியாகப் பதவி விலக வேண்டும். இல்லாவிட்டால் அவர் மீது கண்டன தீர்மானம் கொண்டு வந்து பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க பிரதிநிதிகள் அவை சபாநாயகர் நான்சி பெலோசி உறுதியாகத் தெரிவித்தார்.
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 3-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் தற்போதைய அதிபர் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ட்ரம்ப் தோல்வி அடைந்தார். ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் வெற்றி பெற்றார். ஆனால், தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக ட்ரம்ப் குற்றம் சாட்டினார். அத்துடன் பல மாகாணங்களில் வழக்கும் தொடுத்தார். அவை அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன. இதற்கிடையில், அமெரிக்காவின் பல பகுதிகளில் ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/38sdfnw
via IFTTT
إرسال تعليق