பைசர் கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டவர்களுக்கு சில அலர்ஜி அறிகுறிகள் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க உணவு மற்றும் மருந்துத் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க மருத்துவத் துறை இயக்குனர் மார்க் கூறும்போது, “அலஸ்கா உள்ளிட்ட மாகாணங்களில் கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட சிலருக்கு அலர்ஜி அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன. இதேபோன்று பிரிட்டனிலும் சிலருக்கு அலர்ஜி ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே அலர்ஜி உள்ளவர்களுக்கே மீண்டும் அலர்ஜி ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது நலமாக உள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3mszJso
via IFTTT
إرسال تعليق