அமெரிக்காவில் சமீபத்தில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றி பெற்றார். அவர் ஜனவரி மாதம் அதிபராகப் பதவியேற்கிறார். இந்நிலையில், தனது நிர்வாகத்தில் இடம்பெறுவோர் குறித்துஆலோசனை நடத்தி ஒவ்வொருவராக தேர்ந்தெடுத்து வருகிறார். அதன்படி, வெள்ளை மாளிகை பத்திரிகை தொடர்புத் துறை உதவிசெயலாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வேதாந்த் படேல் என்பவரை தேர்ந்தெடுத்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் பிறந்தவர் வேதாந்த். கலிபோர்னியாவில் வளர்ந்தவர். அங்குள்ள பல்கலை. மற்றும் புளோரிடா பல்கலை.யில் பட்டம் பெற்றவர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3h0llXi
via IFTTT
Post a Comment