அமெரிக்காவில் 6 வயது சிறுவன் ஒருவன் தனது தாயின் ஆப்பிள் ஐபேடில் கேம் விளையாடி ரூ.11 லட்சத்தை வீணடித்துள்ளான். ஆனால் அந்தத் தொகையை திரும்பத் தர இயலாது எனஆப்பிள் நிறுவனம் கைவிரித்துவிட்டது.
நியூயார்க் நகரைச் சேர்ந்த ஜெஸ்ஸிகா ஜான்சன் (41) என்பவர் தனது வங்கிக் கணக்கில் இருந்து 16,000 டாலர் (சுமார் ரூ.11 லட்சம்) எடுக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஹேக்கர்களால் மோசடி செய்யப்பட்டுள்ளதாக கருதி, வங்கியில் புகார் அளித்தார். இதையடுத்து வங்கி அதிகாரிகள் நடத்திய ஆய்வில் அவ்வாறு மோசடி எதுவும் நடைபெறவில்லை எனத் தெரியவந்தது. மேலும் அவரது 6 வயது மகன் ஜார்ஜ், ஐபேடில் கேம் விளையாடி இத்தொகையை இழந்துள்ளது தெரியவந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3oPm0xk
via IFTTT
إرسال تعليق